New Videos from Prabhanjam.TV
Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

அமெரிக்காவில் ஹைபர்லூப் போக்குவரத்து திட்டம் தொடங்க முடிவு


எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ்-இன் நிர்வாக இயக்குனரான எலோன் மஸ்க் தனது எதிர்காலத் திட்டமான ஹைபர்லூப் போக்குவரத்து திட்டத்தைப் பற்றிய அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். கன்கார்ட், அதிவேக ரயில், ஏர் ஹாக்கி டேபிள் போன்றவற்றை கலந்தாற்போன்ற மாதிரியில், சூரிய சக்தியின் உதவியுடன் உடைந்துவிடாத தன்மை கொண்ட காப்ஸ்யூல் வடிவத்தில் உள்ள இந்த போக்குவரத்து சாதனத்தில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அரை மணி நேரத்தில் செல்ல முடியும். 

இது வெற்றியடையும் பட்சத்தில், நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் ஒரு புதிய சாதனையே நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். ஆயினும், பொருளாதாரம் மற்றும் இதன் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் இதில் இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இதன் ஒரு அமைப்பைச் செய்யவே 6 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். இதனைக் கட்டி முடிப்பதற்கு 7 முதல் 10 ஆண்டு வரை ஆகக்கூடும். 28 பயணிகள் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய அளவில் ஒவ்வொரு காப்ஸ்யூலும் இருக்கும். இதன்மூலம் அமெரிக்காவின் பரபரப்பான மேற்கு கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் ஏழு மில்லியன் மக்களை சுமந்து செல்லக்கூடியதாக இந்தத் திட்டம் அமையும் என்றும், இதன்மூலம் வாகனங்களையும் ஏற்றிச் செல்லமுடியும் என்று மஸ்க்கின் அறிக்கை வெளியீடு தெரிவிக்கின்றது.

கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் திட்டமிட்டிருக்கும் 68 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமையவிருக்கும் அதிவேக ரயில் திட்டத்திற்கு இது சிறந்த மாற்றாக இருக்கும் என்று மஸ்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இதிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாக வல்லுனர்களால் கருதப்படுகின்றது. அவற்றை சரிசெய்ய முற்பட்டால் திட்ட மதிப்பீடு இரண்டு மடங்காகும் என்று புல்லட் ரயில் கண்டுபிடிப்பாளரான ஜிம் போவெல் தெரிவித்துள்ளார்.

Information From Maalaimalar

மூளையில் ரத்த உறைவை நீக்கும் நவீன ரோபோ



மூளையில் ஏற்படும் ரத்த உறைவை நீக்கும் நவீன ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்து மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்களால் தலையில் காயம் ஏற்படும்போது மூளையில் ரத்த உறைவு ஏற்படுகிறது. அதை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், புதுமையான முயற்சியாக தற்போது மூளையில் உறையும் ரத்தத்தை அகற்றும் புதிய ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மூளையின் உட்புறம் மிக ஆழமாக சென்று அங்கு உறைந்து கிடக்கும் ரத்தக் கட்டிகளை அகற்றுகின்றன. அதற்காக மிக நுண்ணிய ஊசிகள் ரோபோ மூலம் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரோபோவை அமெரிக்காவின் டென்னிசே மாகாணத்தில் நாஷ்வில் லேயில் உள்ள வாண்டர் பில்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ரோபோவின் கைகளில் மிக நுண்ணிய ஊசிகள் மாட்டப்படுகின்றன. அவை மூளையின் உட்புறத்தில் செலுத்தப்பட்டு உறைந்து கிடக்கும் ரத்தம் அகற்றப்பட்டு வெளியே உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் மிக சிறிய அளவிலேயே சேதம் ஏற்படும். இந்த ரோபோவை பல கோணங்களில் திருப்பி செயல்படுத்த முடியும்.

Information From Maalaimalar

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற 1 லட்சம் பேர் விண்ணப்பம்



செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 'தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்' என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை தி மார்ஸ் ஓன் புராஜக்ட் தலைமை அதிகாரி பால் லேனல் டிரப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே பூமியில் இருந்து செல்லும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் செல்ல மிகவும் கடினம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 அதே நேரத்தில் மனிதர்கள் வரும்போதும் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Information From Maalaimalar

கின்னஸ் சாதனைக்காக 100 கிலோ எடை கொண்ட ராட்சத இட்லி தயாரிப்பு




கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (வயது 42). இவர் கின்னஸ் சாதனைக்காக 100 கிலோ எடையில் ஒரே இட்லியை தயாரிக்க முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சி கொடுங்கையூரில் நடந்தது. இதில் மிகப் பெரிய இட்லியை இனியவன் தயாரித்து காட்டினார். இதை எடை போட்ட போது 120 கிலோ 300 கிராம் எடை இருந்தது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது 100 சுவைகளில் 100 வகையான இட்லி கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.

பாதாம், பூசன், கீரை, கேழ்வரகு, சத்து மாவு, எள் என பல வகை பொருட்களால் உருவான இட்லிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. நட்சத்திரம், வீடு, சதுரம், கரடி பொம்மை போன்ற பல்வேறு வடிவங்களிலும் இட்லி தயாரிக்கப்பட்டிருந்தது.

மேலும் அனைத்து கட்சிகளின் சின்னங்கள் வடிவிலும் இட்லி செய்யப்பட்டிருந்தன. தங்க பஸ்பம் இட்லியும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்த சாதனை தொடர்பாக இனியவன் கூறியதாவது:–

தமிழகத்தில் சாதனையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் சாதனைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதில் பல தடைகள் மற்றும் இன்னல்கள் உள்ளன. அது போன்ற தடைகளை தாண்டி இந்த கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Information From Maalaimalar

மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்?: புதிய கருவி கண்டுபிடிப்பு


மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

  இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது, கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று எண்டோதிலியல் செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன.

 இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம்.

 மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதில் அறிய முடிவதின் மூலம், மனிதன் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான் என துல்லியமாக கணக்கிட முடியும். 

எளிய முறையில் கையாளக் கூடிய இந்த கருவியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பயன்படுத்துவர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

Information From Thinakkural

பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி



உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இன்று காலை 9:15 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய வகையில் பிரித்வி 2 வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்த்தாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பிரித்வி 2 சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
மேம்படுத்தப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Information From Puthiyathalaimurai


வெளியானது கோச்சடையான் கதை



மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பி வரும் கோச்சடையான் கதை தற்போது வெளிவந்துள்ளது. சவுந்தர்யா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கோச்சடையான். 

தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். 

ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடாமல் அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள். 

அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார்.

 தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார். இதுதான் கதையின் மையக்கருவாம்.

 மிகப்பெரிய சுறா மீனுடன் ரஜினி சண்டையிடும் காட்சி, ஹாலிவுட்டின் அவதார் மற்றும் டின் டின்னிற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாம். 


Information From Thinakkural

Wi-Fi தொழில்நுட்பத்துடன் இச்ணணிண அறிமுகப்படுத்தும் வீடியோ கமெரா





இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட Canon  நிறுவனம் ஆனது Wi-Fi  வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. Vixia எனும் பெயருடன் அறிமுகமாகும் இச்சாதனமானது 3 து 0.9 து 3.8 அங்குல அளவு பரிமாணத்தை உடையதாகக் காணப்படுகின்றது.

மேலும் 12.8 மெகாபிக்சல்களை கொண்ட இக்கமெராவில் 2.8 அங்குல அளவுடைய LCD திரையும் பொருத்தப்பட்டுள்ளது.

 இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 760 mAh  மின்கலத்தின் உதவியுடன் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக காணப்படுகின்றது. 

இக்கமெராவின் பெறுமதி 299.99 அமெரிக்க டொலர்களாகும் .

Information From Thinakkural

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்




தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது. இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்பு குத்தப்பட்டுவருகின்றன. அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது. இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் க்ஞதணtத இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

Information From Thinakkural

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்



சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னணி விரர் பருபள்ளி காஷ்யப் ஆகியோர் காலிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் வளர்ந்து வரும் வீராங்கனை பி.வி.சிந்து மட்டும் பதக்கம் வெல்லும் போட்டியில் இருந்தார். 

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், உலகத் தரநிலையில் 8-ம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஷிஜியான் வாங்கை வென்ற சிந்து, பதக்கத்தை உறுதி செய்தார். அத்துடன் தனி நபர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் அவர் எட்டினார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலகின் 3ம் தரநிலை வீராங்கனை ரட்சனோக் இன்டானனை (தாய்லாந்து) சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ரட்சனோக் முன்னிலையில் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து சிந்து போராடினார். ஆனால் அடுத்தடுத்து 5 புள்ளிகளை எடுத்து அசத்திய ரட்சனோக், முதல் செட்டை எளிதாக வென்றார். அதே வேகத்தில் 2-வது செட்டையும் கைப்பற்றினார். 35 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இப்போட்டியில், 10-21, 13-21 என்ற செட்கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். இதனால் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். 

இதற்கு முன்னர் கடந்த 1983-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாஷ் படுகோனே வெண்கலம் வென்றார். 2011ல் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது. இன்றைய அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரட்சனோக், நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை லீ சுவேருயியை (சீனா) எதிர்கொள்கிறார். 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் என்பது குறிப்பிடத்தக்கது.

Information From Maalaimalar

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றி




முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கும் நீர்மூழகிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்றிரவு இந்த சோதனை நடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது இந்திய அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை நிலம், ஆகாயம் மற்றும் கடற்பரப்பில் 750 கிலோ மீட்டர் தூரம் வரை செலுத்தி தாக்க முடியும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் விரைவில் கடற்படையின் போர் பிரிவில் சேர்க்கப்படவுள்ளது.
நூறு மீட்டர் நீளம் கொண்ட ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டு வந்தது.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தப்பட்டது.
ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் நீர்மூழகிக் கப்பல்கள் உள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் முதன் முறையாக இணைந்துள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், அறிவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இது இந்திய வரலாற்றின் மைல் கல் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்

Information From Puthiyathalaimurai

பாரீஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்



பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் ஈபிள் கோபுரம் (டவர்) உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இது 1889–ம் ஆண்டு ஈபிள் என்ற என்ஜினீயரால் வடிவமைத்து கட்டப்பட்டது. 1062 அடி (324 மீட்டர்) உயரம் கொண்டது. கோடைகாலமான தற்போது அதை தினசரி 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். ஆண்டுக்கு 70 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று இந்த கோபுரத்தை தகர்க்க அதற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர். தீவிரவாதிகளின் பேச்சை இடை மறித்து கேட்ட போது இந்த தகவல் கிடைத்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

இதனால் பீதி அடைந்த ஈபிள் கோபுர நிர்வாகிகள் அதை மதியம் 12.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை மூடினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பின்னர் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, மாலை 2.30 மணிக்கு பிறகு பார்வையாளர்களுக்காக மீண்டும் ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. தற்போது நேற்று 2–வது தடவையாக மூடப்பட்டுள்ளது.

இதுபோன்ற வதந்தியால் இந்த வருடத்தில் மட்டும் 2 தடவை ஈபிள் கோபுரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Information From Maalaimalar

போலி கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் ரூ.4.4 லட்சம் நூதன கொள்ளை



மும்பை கொலாபா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி போலீஸ்காரர்களின் சம்பள பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் உஷார் ஆனார்கள். சம்பந்தப்பட்டவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்தனர். தற்போது மீண்டும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை நடந்துள்ளது. இந்த முறை போரிவல்லி பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முன்பு போலீஸ்காரர்களின் பணம் கொள்ளை போனது. இப்போது பொது மக்களின் பணம் கொள்ளை போய் இருக்கிறது. மொத்த்ம 13 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.


பிரபாபாட்டியா என்ற பெண்ணின் கணக்கில் இருந்து இந்த மாதம் 5–ந்தேதி 3 முறை ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இவர் தனது மகனின் கல்லூரி கட்டணத்துக்காக இந்தப் பணத்தை சேமித்து வைத்து இருந்தார்.
இது பற்றி மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மேலும் பல வாடிக்கையாளர்கள் இது போல் தங்களது வங்கி கணக்கில் இருந்த பணம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து திருடப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்தன. மொத்தம் 13 பேர் புகார் செய்துள்ளனர்.
ஏ.டி.எம். எந்திரங்களின் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் அதில் ஸ்கிம்மர் கருவியை ரகசியமாக பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளை நகல் எடுத்து விடுகிறார்கள். பின்னர் அது போல் போலி கார்டுகளை தயாரித்து இந்த நூதன கொள்ளையில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரே கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் சந்தேகப்படும் நபரின் உருவம் பதிவாகி இருக்கும். எனவே கண்காணிப்பு காமிரா மூலம் கொள்ளையனை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களின் கண்காணிப்பு காமிரா பதிவுகளை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து போலீசார் கேட்டு இருக்கிறார்கள்.

Information From Maalaimalar

ரெடியானது கோச்சடையான் டிரைலர் (வீடியோ இணைப்பு)


செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டிரெய்லர் ரெடியாகி யுள்ளது. கோச்சடையான் எப்போது ரிலீஸாகும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரெய்லர் கூட தயாராகிவிட்டதாம். அவதார் படம் போலவே இந்தப் படத்திலும் விஷுவல் எபக்ட் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டதாம். படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒருவேளை ரஜினியின் பிறந்தநாளுக்கு கோச்சடையான் வெளிவரலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட திட்டம் எதுவும் தற்போது இல்லையாம். 

Information From Thinakkural

மயிலம் அருகே மர்மமாக தீபிடிக்கும் குழந்தை: டாக்டர்கள் காரணத்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சி




விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த டி.பரங்கினி பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராகுல் என்ற 2 மாத குழந்தை உள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு ராகுல் வீட்டில் இருந்தபோது அவனது உடலில் திடீரென தீப்பிடித்தது. வீடும் தீப்பற்றி கொண்டது. அவனை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அதன்பிறகு பக்கத்து வீட்டில் மர்மமாக தீப்பிடித்தது. இதனால் பயந்துபோன ராகுலின் பெற்றோர் அவனை புதுவை அருகே உள்ள சிங்கிரி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்தபோதும் அவனது உடலில் தீப்பிடித்தது.
அதன்பிறகு வானூர் அருகே உள்ள உறவினர் கிராமத்துக்கு சென்று தங்கினார்கள். அங்கு குழந்தையின் உடலில் தீப்பிடித்தது. பக்கத்து வீடு ஒன்றும் தானாக தீப்பிடித்து எரிந்தது. அவனை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தானாக அவனது உடலில் தீப்படிப்பதுடன் அந்த ஊரில் உள்ள வீடுகளும் எரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால் ராகுலை ஊருக்குள் விட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பக்கத்து கிராமமான குமுளம்பட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் ராகுலுடன் கர்ணன், ராஜேஸ்வரி தஞ்சமடைந்தனர்.
நேற்று இரவு பிரம்மதேசத்தில் உள்ள வக்கிர காளியம்மன் கோவிலுக்கு வந்தனர். இரவு முழுவதும் அந்த கோவிலிலேயே தங்கினர். இதனை அறிந்த பக்கத்து கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திண்டிவனம் தாசில்தார் ஜெயக்குமார், துணை தாசில்தார் மதியழகன், பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். கர்ணன், ராஜேஸ்வரியிடம் ராகுல் உடல்நிலை குறித்து தாசில்தார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுபற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மர்ம தீயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலை பரிசோதிக்க விழுப்புரத்தில் இருந்து மருத்துவ குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழு இன்று பிரம்மதேசம் வந்தது. அவர்கள் குழந்தையை பரிசோதித்தனர். 

குழந்தை உடலில் எப்படி தீப்பிடிக்கிறது, உண்மையிலே தீப்பிடிக்கிறதா? அல்லது வேறு யாராவது தீ வைத்துவிட்டு ஏமாற்றுகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். பரிசோதனையில் உண்மையை கண்டு பிடிக்க முடியாவிட்டால் ராகுலை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ராகுலை பரிசோதிக்க டாக்டர்கள் குழு வந்ததை அடுத்து பிரம்மதேசம் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த ஏராளமானபேர் அங்கு திரண்டிருந்தனர்.

Information From Maalaimalar

தியேட்டர் அதிபர்கள் அவசர கூட்டம்: விஜய்யின் தலைவா படம் நாளை ரிலீசாகுமா?


விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள தலைவா படம் நாளை (9–ந்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மதராச பட்டணம் விஜய் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார்.

நேற்று காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன.

இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் தலைவா படம் திட்டமிட்டபடி நாளை ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. தலைவா அரசியல் படம் அல்ல என்றும் வதந்திகள் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம் என்றும் விஜய் அறிவித்தார். இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

நள்ளிரவுவரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மறு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பில் வரி விலக்கு குழுவுக்கு படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.

வரி விலக்கு குழுவினர் இன்று படம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி விலக்கு அளிக்கலாம் என அவர்கள் சான்றிதழ் அளித்தால் படம் நாளை ரிலீசாகும் என கூறப்படுகிறது


Information From Maalaimalar

இந்தியா ஏ அணியில் ஓடிசா வீரர்: 44 போட்டிகளில் 170 விக்கெட்களை வீழ்த்தியவர்



ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் பசந்த் மொகந்திக்கு இந்திய ஏ அணியில் இடம் கிடைத்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விசாகப்பட்டினத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி விளையாட உள்ளது. இதில் இந்திய ஏ அணியில் இடபெற்றிருக்கும் பசந்த் மொகந்தி இதுவரை 44 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய ஒடிசா மாநில வீரர் தேபஷிஸ் மொகந்திக்குப் பிறகு இந்திய அணியில் கால்பதிக்கும் 2-வது வீரர் பசந்த் மொகந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏ அணியில் இடம் பெற்ற பெசந்த் மொகந்திக்கு ஒடிசா கிரிக்கெட் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Information From Puthiyathalaimurai

சவூதி, மலேசியா, எகிப்தில் இன்று ரமலான் கொண்டாட்டம்




சவூதி அரேபியா,மலேசியா, இந்தோனேசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதேபோல், கேரளாவிலும் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
30 நாட்கள் நோன்பிருந்து இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

Information From Puthiyathalaimurai

என் மகள் மீது வைத்துள்ள பாசத்தால் அழுகிறேன்: டைரக்டர் சேரன்



மகள் பிடிவாதத்தால் டைரக்டர் சேரன் உடைந்து போய் இருக்கிறார். ஐகோர்ட்டில் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார்.

தாமினி முகத்தை பார்க்கவும் பேசவும் சேரனிடம் ஆர்வம் பொங்கியது. ஆனால் தாமினி கண்டு கொள்ளவே இல்லை. முகத்தில் வருத்தம், சலனம் எதுவும் இன்றி இருந்தார். காதலன் சந்துருவை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இரு வாரங்கள் தாமினி படித்த பள்ளிக் கூடத்தின் தாளாளர் வீட்டில் அவரை தங்க 
வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. டைரக்டர் சேரனிடம் பேசிய போது ஒரு தந்தையின் வலிகளை உணர முடிந்தது. அவர் கூறியதாவது:–

என்னை நிறைய பேர் போனில் அழைக்கிறார்கள். யாரிடமும் பேச முடிய வில்லை. பேசும் போது வேதனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இது எனக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட வேதனை. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நான் ஹீரோ இல்லை என்று எனக்கு தெரியும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடும் ஒரு தந்தையாக என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எந்த விதத்திலும் எனது சொந்த பலத்தை நான் பயன்படுத்தவில்லை. இந்த பிரச்சினையை சட்டத்தின் உதவியோடு நேர்மையாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த போது நான் அழுது விட்டேன். மகள் மீதுள்ள பாசத்தால் அழுகிறேன்.

திரையுலகில் எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். டைரக்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் இதயம் காயப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திரையுலகினர் எனக்கு துணையாக இருப்பது வலிக்கு மருந்தாக உள்ளது.
என் மகள் மேல் எந்த தப்பும் இல்லை. அவளுக்கு இருபது வயதுதான் ஆகிறது. வாழ்க்கை பற்றி புரியாத வயது. இது கோபப்படுவதற்கான நேரம் அல்ல. அவளுக்கு நல்லது நடக்க போராடுகிறேன்.
இவ்வாறு சேரன் கூறினார்.

Information From Maalaimalar

ஒரே நாளில் ரிலீஸ்: விஷால், கார்த்தி படங்கள் போட்டி


விஷாலின் ‘மதகஜராஜா’ படமும் கார்த்தியின் ‘பிரியாணி’ படமும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6–ந்தேதி ஒரே நாளில் ரிலீசாகின்றன. இவ்விரு படங்களும் போட்டியிடும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் வருகிறது. மதகஜராஜா படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். 

இந்த படம் முன்பே ரிலீசாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மரணம் அடைந்ததால் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினைகள் முடிந்து ரிலீசுக்கு வருகிறது. 

பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன், ராம்கி, நிதின்சத்யா, மதுமிதா போன்றோரும் உள்ளனர். காமெடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடி படமாக தயாராகியுள்ளது.


Information From Maalaimalar
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger