முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கும் நீர்மூழகிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்றிரவு இந்த சோதனை நடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது இந்திய அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை நிலம், ஆகாயம் மற்றும் கடற்பரப்பில் 750 கிலோ மீட்டர் தூரம் வரை செலுத்தி தாக்க முடியும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் விரைவில் கடற்படையின் போர் பிரிவில் சேர்க்கப்படவுள்ளது.
நூறு மீட்டர் நீளம் கொண்ட ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டு வந்தது.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தப்பட்டது.
ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் நீர்மூழகிக் கப்பல்கள் உள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் முதன் முறையாக இணைந்துள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், அறிவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இது இந்திய வரலாற்றின் மைல் கல் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்
Information From Puthiyathalaimurai