இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட Canon நிறுவனம் ஆனது Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. Vixia எனும் பெயருடன் அறிமுகமாகும் இச்சாதனமானது 3 து 0.9 து 3.8 அங்குல அளவு பரிமாணத்தை உடையதாகக் காணப்படுகின்றது.
மேலும் 12.8 மெகாபிக்சல்களை கொண்ட இக்கமெராவில் 2.8 அங்குல அளவுடைய LCD திரையும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 760 mAh மின்கலத்தின் உதவியுடன் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
இக்கமெராவின் பெறுமதி 299.99 அமெரிக்க டொலர்களாகும் .
Information From Thinakkural