மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது, கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று எண்டோதிலியல் செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன.
இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம்.
மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதில் அறிய முடிவதின் மூலம், மனிதன் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான் என துல்லியமாக கணக்கிட முடியும்.
எளிய முறையில் கையாளக் கூடிய இந்த கருவியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பயன்படுத்துவர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Information From Thinakkural