விஷாலின் ‘மதகஜராஜா’ படமும் கார்த்தியின் ‘பிரியாணி’ படமும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6–ந்தேதி ஒரே நாளில் ரிலீசாகின்றன. இவ்விரு படங்களும் போட்டியிடும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் வருகிறது. மதகஜராஜா படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இந்த படம் முன்பே ரிலீசாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மரணம் அடைந்ததால் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினைகள் முடிந்து ரிலீசுக்கு வருகிறது.
பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன், ராம்கி, நிதின்சத்யா, மதுமிதா போன்றோரும் உள்ளனர். காமெடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடி படமாக தயாராகியுள்ளது.
Information From Maalaimalar