புதிய பன்னாட்டு விமான நிலையம் 7–ந்தேதி முதல் செயல்படும் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தப்பட்டது. உள்நாட்டு விமான நிலையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் ஆகிய இரண்டும் பல ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது.
உள்நாட்டு விமான நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதி திறந்து வைத்தார். புதிய விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கண்ணாடி மாளிகை போல வடிவமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையம் பணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால் பன்னாட்டு விமான நிலையம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை வரவில்லை. பல்வேறு வசதிகள் குறைவாக இருப்பதாக கூறி தனியார் விமான நிறுவனங்களும், விமான சேவை அதிகாரிகளும் புதிய விமான நிலையத்திற்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.
சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்வதற்கு போதுமான வசதி செய்து தரவேண்டும். தற்போது உள்ள வசதி போதாது என்று வலியுறுத்தினார்கள்.
இதனால் புதிய பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த குறைகளை களையும் வகையில் விமானத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 7–ந்தேதி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் 27–ந்தேதி புதிய பன்னாட்டு விமான நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போதும் வரவில்லை.
இந்த நிலையில் இந்திய விமான ஆணையம் அதிகாரிகள் நேற்று இறுதிகட்ட ஆய்வினை புதிய பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொண்டனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பன்னாட்டு விமான நிலையம் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தன்ர.
இதையடுத்து வருகிற 7–ந்தேதி புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்படுகிறது. முதல் நாளில் 9 விமான நிறு வனங்களின் 7 விமானங்கள் சேவையை தொடங்குகிறது.
விமான நிலையத்தின் உள்ளே சில கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் பாதுகாப்பிற்காக மத்திய தொழிற்படையை சேர்ந்த 80 பேர் ஈடுபடுத்தவும் உள்ளனர். மத்திய பாதுகாப்பு படை போலீசார் 6–ந்தேதி முதல் பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே உள்ள பன்னாட்டு விமான நிலையம் சில மாதங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் பன்னாட்டு விமான நிலையம் புதுப்பிக்கப் படுகிறது.
Information From Maalaimalar