மத்திய மந்திரி ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இறக்குமதியை குறைக்கும் வகையில் ஆடம்பர பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பற்றாக் குறையை தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த வரி உயர்வுக்கு குறிப்பிட்ட எந்த திட்டமும் இல்லை. தங்கத்தின் மீதான இறக்குமதியில் மட்டும் தற்போது இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பற்றாக்குறையை தவிர்க்க இதனை மேலும் பல பொருட்களின் இறக்குமதியிலும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், அவசியம் இல்லாத சில ஆடம்பர பொருட்களின் இறக்கு மதியை கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதி அளவு குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எந்தந்த பொருட்களுக்கு எவ்வளவு வரிகள் உயர்த்தப்பட உள்ளது என்பது பற்றி ப.சிதம்பரம் தெரிவிக்க வில்லை.
சுங்கவரி அதிகரிப்பதின் மூலம் ஆடம்பர பொருட்களின் விலை உயரும்.
Information From Maalaimalar