சென்னை: 2012-13ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலத்தை அடுத்த மாதம் 5ந் தேதி வருமான வரித்துறை நீடித்துள்ளது. வருமான வரியை தாக்கல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி மண்டல அலுவலகத்தில் 34 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு 24 கவுன்டர்களும், காஞ்சிபுரத்துக்கு 3 கவுன்டர்களும், தாம்பரத்துக்கு 7 கவுன்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக தலா ஒரு கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்க 30 கவுன்டர்கள் மற்றும் 2 உதவி மையங்கள் செயல்படுகின்றன. சிறப்பு கவுன்டர்கள் அடுத்த மாதம் 5ந் தேதி மாலை 5.30 மணி வரை செயல்படும்.
ரூ.5 லட்சத்திற்கு கீழ் மாதச் சம்பளம் வாங்கும் அனைவரும் இனிமேல் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அவர்கள் 2013-14 மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். மேலும் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள் விரைவாக கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (201213) தமிழகத்தில் ரூ.40 ஆயிரத்து 528 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.37 ஆயிரத்து 271 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.45 ஆயிரத்து 877 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் ஜூலை 25 வரை ரூ.8 ஆயிரத்து 136 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
Information From Dinakaran