New Videos from Prabhanjam.TV
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

நடிக்க வராவிட்டால் சமையல் காரனாகி இருப்பேன் :தனுஷ்




‘துள்ளுவதோ இளமை’’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். சினிமாவிற்கு இவர் வந்த புதிதில் இந்த பையனா ஹீரோ, இவரை வைத்து எப்படி படம் எடுப்பது என்று தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தயங்கினர். ஆனால் காலப்போக்கில் இவர் நடித்த காதல்கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக பேசப்படும் நடிகரானார். தனக்கே உரிய இயல்பான நடிப்பில் நடித்து ‘‘ஆடுகளம்’’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். ‘கொலவெறி....’ பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்பட்டு, இந்தியிலும் ராஞ்சனா எனும் படத்தின் மூலம் கால்பதித்து அங்கும் பேசப்படும் நடிகராகிவிட்டார். சினிமாவில் தனுஷின் இன்றைய நிலையே‌ வேறு. இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் தனக்கே உரிய ஸ்டைலில் அவர் அளித்த பேட்டி இதோ...

* எப்போ, இயக்குனராகப் போறீங்க?

திரைக்கதை எல்லாம் ரெடியாகி விட்டது. நேரம் பார்த்து,களத்தில் குதித்து விட வேண்டியது தான். விரைவில்இயக்குனராகி விடுவேன்.

* வெங்க‌டேஷ் பிரபு என்ற தனுஷ், சினிமாவுக்குவராமல் இருந்திருந்தால்?

எனக்கு நல்லா சமைக்க தெரியும் பாஸ். அதனால, சினிமாபக்கம் வராமல் இருந்திருந்தால், நல்ல சமையல்காரனாஆகியிருப்பேன்.

* உங்கள், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், அடுத்து எப்போ நடிக்கப்போறீங்க?

அப்படிப்பட்ட ஐடியா எதுவும், இப்போது இல்லை. ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க மாட்டேன்.

* உங்கள் மகன்கள், யாத்ரா,லிங்கா, எப்படி வரணும்னு ஐடியா எதுவும் இருக்கா?


அவங்களுக்கு எப்படி வரணும்னு இஷ்டம் இருகோ, அப்படி வரட்டும். அவர்களின்
விருப்பத்தில் தலையிட மாட்டேன்.

* உங்கள் சகோதரர் செல்வராகவன், ஓய்வு பெறப் போவதாக கூறுகிறாரே?

கண்டிப்பாக, ஓய்வு பெற மாட்டார். தொடர்ந்து, நல்ல படங்களை இயக்குவார்.

* உங்களை எல்லோருக்கும் பிடிச்சுருக்கு? உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்?

கவுண்டமணி அண்ணனின் காமெடி ரொம்ப பிடிக்கும். ஓய்வுகிடைக்கும் போதெல்லாம், அவரது காமெடியை பார்த்து, விழுந்து விழுந்து ரசித்து,சிரிப்பேன்.

Information From Dinamalar

வழிக்காட்டு தகவல்கள் தரும் சென்சார் ஹெல்மெட்



வழிக்காட்டு தகவல்கள் தரும் புதிய ஹெல்மெட்டை ரஷ்யாரவ சேர்ந்த எஞ்சினியர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த ஹெல்மெட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கூறுகின்றனர். இந்த ஹெல்மெட் தலையில் அணிந்திருந்தால், அணிந்திருப்பதே தெரியாது. விபத்து நேரிட்டால் மட்டுமே இதனுள் பொருத்தப்பட்ட சென்சார்களைத் தூண்டி காற்றுப் பையானது செயல்படுகிறது. 

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு ஹெல்மெட் பெரிதாகி தலையில் அடி ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் இதை அணிந்து கொண்டு செல்பவரின் வேகம், காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசை ஆகியவை இந்த ஹெல்மெட்டின் மூலமாக அறிய முடியும். மின்சாரத்தின் மூலம் இந்த ஹெல்மெட் செயல்படுவதால், மாதத்தில் ஒரு முறை ஹெல்மெட்டை சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். 

Information From Dinakaran

புதிய டிஸ்கவர் மற்றும் பல்சர் பிராண்டில் விரைவில் அறிமுகம்




மூன்றாவது இடத்தில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிஸ்கவர் மற்றும் பல்சர் பிராண்டில் 2 பைக்குகளை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 

இந்த புதிய 2 மாடல்களில் ஒன்று பல்சர் 390 மற்றும் ஆட்டோ மொபைல் துறையினரின் கணிப்புப்படி மற்றொரு பல்சர் 200சிசி திறன் கொண்ட செக்மென்ட்டிலேயே வரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய பஜாஜ் ஆட்டோ 2 மாடல்களும் மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், சில மாதங்களில் 2 பைக்குகளும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகின்றன.

Information From Dinakaran

 100 அடியைத் தாண்டியது நீர்மட்டம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு




நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. 100 அடியை கடந்தபோது நள்ளிரவில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீரில் மலர்த்தூவி வரவேற்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து அதிகளவு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் அணையில் 66 டி.எம்.சி,. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 6800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், காட்டாறு போல் பொங்கி வரும் தண்ணீரைக் காண சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் மேட்டூருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

Information From Puthiyathalaimurai

சாம்சங் கேலக்ஸி மெகா 5.8




சாம்சங் கேலக்ஸி மெகா 5.8 5.8-அங்குல டிஎஃப்டி திரை மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 மூலம் இயக்கப்படுகிறது. தொலைபேசி பின் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டது. தொலைபேசி பின் 8 மெகாபிக்சல் கேமரா லென்ஸ் உடன் LED ஃபிளாஷ் மற்றும் அடுத்ததாக ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. முகப்பு பொத்தானை காட்சிக்கு கீழே வைக்கப்படுகிறது. Earpiece கிரில், உணரி அணியும் மற்றும் முன் எதிர்கொள்ளும் கேமரா லென்ஸ் காட்சிக்கு மேலே அமைந்துள்ளது.

தொலைபேசி நீக்கக்கூடிய பின்புற அட்டை உள்ளது. MicroSD அட்டை ஸ்லாட் உடன் இணைந்து இரண்டாவது சிம் கார்டு ஸ்லாட் உள்ளது. சாம்சங் கேலக்ஸி மெகா 5.8 இரட்டை சிம் சாதனம் ஆகும். 3.5mm ஹெட்செட் ஜேக் தொலைபேசியின் மேல் அமைந்துள்ளது. வால்யூம் ராக்கர் இடது பக்கத்தில் உள்ளது. தொலைபேசியின் வலது பக்கத்தில் ஆற்றல் பொத்தான் அமைந்துள்ளது. தொலைபேசியின் கீழே மைக்ரோ-USB போர்ட் உள்ளது. தொலைபேசி உடன் 2,600 Mah பேட்டரி வருகிறது. சாம்சங் கேலக்ஸி மெகா 5.8 இயர்போன், சார்ஜர் மற்றும் ஒரு USB கேபிள் தொகுப்பாக வருகிறது.

Information From Dinakaran

தெற்காசிய கால்பந்து :பைனலில் இந்தியா



காத்மண்டு: தெற்காசிய கால்பந்து தொடரின் (16 வயதுக்குட்பட்டோர்) பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில், 16 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தன. பின், கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் பெதேஷ்வர் சிங், புரோசென்ஜித், சூர்யா, ஆரோன் ஆகியோர் கோல் அடித்தனர்.
சநாளை நடக்கவுள்ள பைனலில், இந்திய அணி, நேபாளத்தை சந்திக்கிறது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Information From Dinamalar

தொடரை வென்றது இந்தியா: ஜிம்பாப்வே ஹாட்ரிக் தோல்வி


ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் சோபிக்கத்தவறிய ஜிம்பாப்வே அணி, "ஹாட்ரிக்' தோல்வி அடைந்து ஏமாற்றியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஜிம்பாப்வே அணியில் ஜார்விஸ் நீக்கப்பட்டு மைக்கேல் சினவ்யா சேர்க்கப்பட்டார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சிபாண்டா ஏமாற்றம்:
ஜிம்பாப்வே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வினய் குமார் "வேகத்தில்' சிபாண்டா "டக்-அவுட்' ஆனார். முகமது ஷமி பந்தில் சிக்கந்தர் ராஜா (1) வெளியேறினார். பின் இணைந்த ஹாமில்டன் மசகட்சா, கேப்டன் பிரண்டன் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது, உனத்கத் பந்தில் டெய்லர் (23) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மசகட்சா (38), அமித் மிஸ்ரா "சுழலில்' சிக்கினார்.
வில்லியம்ஸ் ஆறுதல்:
அடுத்து வந்த வாலர் (0), சிகும்புரா (3) சொற்ப ரன்னில் வெளியேறினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த உட்செயா (10) இம்முறை சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய வில்லியம்ஸ், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். இவர், 45 ரன்கள் எடுத்த போது "ரன்-அவுட்' ஆனார். பிரையன் விடோரி (17), டென்டாய் சடாரா (23) ஓரளவு கைகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி 46 ஓவரில் 183 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா 4, முகமது ஷமி 2 விக்கெட் கைப்பற்றினர்.
விராத் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (14) ஏமாற்றினார். கடந்த போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான் (35) இம்முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு ஜோடி மீண்டும் ஒரு முறை பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த போது, விடோரி பந்தில் அம்பதி ராயுடு (33) அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய கோஹ்லி, ஒருநாள் போட்டியில் தனது 24வது அரைசதம் அடித்தார். இவருக்கு சுரேஷ் ரெய்னா ஒத்துழைப்பு தந்தார். சடாரா பந்தில் சூப்பர் பவுண்டரி அடித்த ரெய்னா, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்திய அணி 35.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. கோஹ்லி (68), ரெய்னா (28) அவுட்டாகாமல் இருந்தனர். "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி வரும் ஆக., 1ம் தேதி புலவாயோவில் நடக்கிறது.
Information From Dinamalar

பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்! இங்கிலாந்து கருத்து கணிப்பில் தகவல்


பாலிவுட்டின் சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த கருத்து கணிப்பில் அவர் சிறந்த நடிகராகவும், முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் பிரபல வாராந்திர பத்திரிகை ஒன்று சிறந்த பாலிவுட் பிரபலங்கள் யார் என்ற பெயரில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் அநேக நபர்கள் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைத்தான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துள்ளனர். 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் அமிதாப் தான் பாலிவுட்டின் சிறந்த நடிகர் என்று தேர்வாகி முதல் இடத்தை பிடித்துள்ளத‌ாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமிதாப்புக்கு அடுத்தபடியாக பழம்பெரும் நடிகர் திலீம் குமார் இரண்டாவது இடமும், ஷாரூக்கான் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள்தவிர ராஜ்கபூர் 5ம் இடமும், நர்கீஸ் 6வது இடமும், தேவ் ஆனந்த் 7வது இடமும், வகீதா ரஹ்மான் 8வது இடமும், ராஜேஷ் கண்ணா 9வது இடமும், நடிகை ஸ்ரீதேவி 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

சல்மான் 11வது இடமும், அமீர் கான் 14வது இடமும், தர்மேந்திரா 15வது இடமும், ஹேமாமாலினி 18வது இடமும், மதுபாலா 24வது இடமும், கஜோல் 30வது இடமும், ஹிருத்திக் ரோஷன் 32வது இடமும், ராணி முகர்ஜி 38வது இடமும், கரீனா கபூர் 43வது இடமும், மும்தாஜ் 50வது இடமும், சைப் அலிகான் 59வது இடமும், பிரியங்கா சோப்ரா 86 இடமும், கத்ரீனா கைப் 93வது இடத்தையும் பெற்றுள்ளனர். 

Information From Dinamalar

இந்தியாவில் 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!



இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 133 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவிக்கும் போது, கடந்த ஓராண்டில் மட்டும் 16 பிரிவுகளில், அதாவது, ஒரு செல்  உயிரினம் முதல், மீன், நண்டு, பறவை உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, அபூர்வமான, பறக்காத பறவை இனம் ஒன்று அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 66 பூச்சி இனங்களும், 4 சிலந்தி இனங்களும், 2 நண்டு இனங்களும், 19 மீன் இனங்களும், 2 நீர்வாழ் இனங்களும், 2 ஊர்வன இனங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனோடு, ஒரு செல் உயிரிகள், உண்ணிகள், என நுண்ணுயிரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக வெங்கட்ராமன் தெரிவித்தார்.
இதேப்போன்று, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு, சுமார் 109 விலங்கினங்களும், 42 பவள இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை பல்வேறு நாடுகளில்  இருப்பதாக அறியப்பட்டாலும், நம் நாட்டிலேயே அவற்றை கண்டுப்பிடித்திருப்பதாக வெங்கட்ராமன் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் வடகிழக்கு பகுதி பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த பகுதியாக விளங்குவதாகவும். இன்னும் கண்டுப்பிடிக்க வேண்டிய உயிரினங்கள் நிறைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட உத்தரகண்ட் இயற்கை சீற்றத்தால் ஏராளமான உயிரினங்கள் அறியப்படாமலேயே நிரந்தரமாக அழிந்திருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

Information From Puthiyathalaimurai


மெட்ரோ ரயில் பணியால் தேவாலயத்தில் விரிசல்




சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் போது, மண்ணடியில் உள்ள 150 ஆண்டுகால பழமை வாய்ந்த தேவாலயத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தேவாலயத்தை மெட்ரோ ரயில் நிர்வாகமே சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக இரண்டு வழித்தடங்களில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் வண்ணாரப்பேட்டை- மீனப்பாக்கம் விமான நிலையம் மார்க்கத்தில், மண்ணடி பகுதியில் பூமிக்கடியில் ஆழ்துழை சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் பிரகாசம் சாலையில் உள்ள மெஸ்லி தமிழ் கிறிஸ்துவ ஆலயத்தில் கடும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 1861-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மெஸ்லி ஆலயம், பழமையின் வெளிப்படாக காட்சியளிக்கிறது.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மெஸ்லி ஆலயத்தின் சீர்குலைந்த பகுதிகளை, மெட்ரோ நிர்வாகம் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Information From Puthiyathalaimurai


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.89அடியாக அதிகரிப்பு




கர்நாடகவிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90அடியை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து அங்கிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 52701 கன அடியாக நீர் வரத்து உள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 89.59 அடியாக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 3.79 அடி அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழக அரசின் உத்தரவு படி, ஆடிப் பெருக்கை காவிரியில் பொதுமக்கள் கொண்டாடும் வகையில் காலை முதல் வினாடிக்கு 3000 கன அடி நீர் சுரங்கம் மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் தேவை மற்றும் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம் ஆகியவைக்காக மொத்தம் 6800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சுரங்கம் மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

Information From Dinakaran

ஊட்டியில் கனமழை மலை ரயில் ரத்து



 ஊட்டி யில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மலை ரயில்  சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ஊட்டி & கூடலூர் சாலையில் சாண்டிநல்லா, எச்பிஎப்., போன்ற பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து போக்குவரத்து  தடைபட்டது. 

ஊட்டி தீயணைப்பு துறையினர் விடிய விடிய பணியாற்றி இந்த மரங்களை அகற்றினர்.  நேற்று காலை ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இம்மரம் ரயில் தண்டவாளம் மீதும் விழுந்ததால் ஊட்டி & குன்னூர் இடையே ரயில் போக்குவரத்தும் காலையில் ரத்து செய்யப்பட்டது.

Information From Dinakaran

95 சதவீதம் பணிகள் நிறைவு கூடங்குளம் 2வது அணு உலையில் டம்மி எரிபொருள் பொருத்தப்பட்டன




நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட் டில் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் அணு உலை 13ம் தேதி நள்ளிரவு முதல் இயங்கத் தொடங்கியது. இதிலிருந்து அடுத்த மாதம் 2வது வாரத்தில் 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் 2வது அணு உலை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதில் டம்மி எரிபொ ருள் நிரப்பும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது எரிபொருள் பொருத்தும் பணி முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. மொத்தம் 163 எரிபொருள் பொருத்தப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.

இந்த முடிவுகள் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதைத் தொடர் ந்து 2வது அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்த அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளிக்கும்.வெப்ப நீர் சோதனை ஓட்டத்தின் போது அணு உலை இயங்கினால் ஏற்படும் அழுத்தத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமான அழுத்தத்தை செலுத்தி அணு உலையின் அழுத்த கலன் பரிசோதிக்கப்படும். ரஷ்ய விஞ்ஞானிகள், இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனைகள் நடைபெறும்.தற்போதைய நிலவரப்படி, 2வது அணு உலையில் 94.77 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2வது அணு உலையின் மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மின் உற்பத்தியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Information From Dinakaran

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் சினிமா நடிகர்கள்




பரம்பரை பரம்பரையாக நிலத்தை உழுது விவசாயம் செய்து வந்தவர்களே சமீபகாலமாக அந்த நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் சினிமாவில் புகழ் உச்சியில் இருக்கும் சில நடிகர்களுக்கு இப்போது விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பல நடிகர்கள் சென்னைக்கு வெளியே ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிப்போட்டு பண்ணை வீடு வைத்திருக்கிறார்கள். அங்குள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வதோடு, தாங்களும் ஒரு ரிலாக்சுக்காக அடிக்கடி அங்கு சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வருகிறார்கள்.

அந்த பட்டியலில் பிரகாஷ்ராஜ், மம்மூட்டி, ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு இருக்கும் விவசாய நிலத்தை அடிக்கடி சென்று பார்வையிடுவதுடன் சிலரைப்போன்று வரப்பில் நின்று கொண்டே விவசாயம் செய்யாமல் சேற்றில் இறங்கி வேலை செய்கிறார்கள். அதோடு, டிராக்டரில் அமர்ந்து நிலத்தை உழுவது, களை எடுப்பது, உரம் போடுவது போன்ற வேலைகளையும் செய்கிறார்கள். 

இவர்களைத் தொடர்ந்து அஜீத், விக்ரம், வடிவேலு ஆகியோரும் விவசாயத்தில் தீவிரமாகி வருகின்றனர். அதிலும் வடிவேலு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நிறைய நிலபுலன்களை வாங்கி குவித்துள்ளாராம். அதில் நிறைய பயிர் செய்து, அந்த பகுதி ஏழை மக்களுக்கு வேலை கொடுத்து வருகிறாராம்.

Information From Dinamalar

பவர்ஸ்டாருடன் மோத பயந்த தலைவா விஜய்


விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வெளியாவது உறுதியாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவுக்கு படம் அனுப்பப்பட்டு விட்டதால், அடுத்தகட்டமாக எந்தெந்த முக்கிய ஊர்களில் படம் வெளியாகிறதோ அங்கெல்லாம் பிரமாண்ட பப்ளிசிட்டிகளை முடுக்கி விட இப்போதே தலைவா டீம் வீறுகொண்டு நிற்கிறது.

இதற்கிடையே விஜய்யின் ரசிகர் பட்டாளமும் தங்கள் சார்பில் ராட்சத கட்அவுட்களை ரெடி பண்ணும் வேலைகளில் இறங்கி விட்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய தியேட்டர்களில் அடுத்த மாதம் 9-ந்தேதி தலைவா வெளியாகிறது. ஆந்திராவிலும் முக்கிய தியேட்டர்களாக தேடிவந்தனர்.

ஆனால், முக்கியமான எந்த தியேட்டரும் கிடைக்கவில்லையாம். ஏன் என்ன காரணம்? எனறு விசாரித்தபோது, ஆகஸ்ட் 7-ந்தேதி தெலுங்கு நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அத்தாரிண்டிகி தாரீதி என்ற படம் வெளியாகிறதாம். அதனால் மொத்த தியேட்டர்களையும் குத்தகை எடுத்து விட்டார்களாம். 

அவர் அங்குள்ள முன்னணி நடிகர். அதனால் அவர் படம் திரைக்கு வருகிற அதே நாளில் தலைவாவை வெளியிட்டாலும் சிக்கல்தான் என்பதால், அப்படம் ஓடி ஓரிரு வாரங்களுக்குப்பிறகு நல்ல தியேட்டர்கள் கிடைக்கிறபோது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று ஆந்திராவில் தலைவா ரிலீஸ் தேதியை தள்ளி போட்டுள்ளனர்.

Information From Dinamalar

ஒகேனக்கல் அருவியில் விநாடிக்கு 55 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் உயர்வு




ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. நேற்று மதிய நிலவரப்படி விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. மாலையில் மேலும் அதிகரித்தது. இதனால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செல்லவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Information From Dinakaran

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி தெரியுமா








USB என்பதன் விரிவாக்கம் Universal Serial Bus என்பதன் சுருக்கமே ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ்.

இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும்.

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும்Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.

பிளாப்பி(Floppy) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb. இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவை. அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொண்டு உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் செயலைச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செய்து கொள்வது நல்லது.

USB -இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
http://www.usbalert.nl/usbalert/download.php
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version-ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar-ல் USBalert செய்திப்படம் காட்டும்.

இம்மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

Information From Dhinakaran


அடுத்த மாத இறுதியில் வரப்போகுது மினிபஸ்



மாநகர பேருந்து வசதி போதிய அளவுக்கு இல்லாத  பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர சிரமம் அடைகின்றனர். இந்த ஏரியா மக்கள் ஷேர் ஆட்டோக்களை நம்பியுள்ளனர். இந்நிலையில் இப்பகுதிகளில் மினி பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டது. 

 இதற்காக தனியார் நிறுவனத்திடம் சேஸ் அமைக்க டெண்டர் விடப்பட்டது. தற்போது சேஸ் அமைக்கும் பணி முடிந்து கரூரில் உள்ள பணிமனையில் பாடி கட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 25க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு பாடிகள் கட்டப்பட்டுள்ளன. பாடி கட்டும் பணி முழுவதுமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத இறுதியில் மினி பஸ்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

 முக்கிய பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் விதத்தில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
 27 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வகையில் மினிபஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் தாழ்தளமாக படிகள் அமைக்கப்படுகிறது. 

முதற்கட்டமாக ஆவடி, தாம்பரம், வியாசர்பாடி, பெருங்குடி, செங்குன்றம், திருவொற்றியூர், கேளம்பாக்கம், கோடம்பாக்கம், அமைந்தகரை, நங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் மினிபஸ்கள் இயக்கப்படும். முதலில் 100 மினிபஸ்களும், பின்னர் தேவைக்கேற்ப பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Information From Dhinakaran

தருமபுரி மாவட்டத்தில் வைக்கோல் கிடைக்காமல் கால்நடைகள் பாதிப்பு




தருமபுரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து கால்நடைகளுக்கான வைக்கோல் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது.
தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த 5 வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால், விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புதுவை, விழுப்புரம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, லாரிகள் மூலம் வைக்கோல் கொண்டுவந்து தர்மபுரி மாவட்டத்தில் விற்கப்படுகிறது.
அதிக விலை கொடுத்து வைக்கோலை வாங்குவதால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Information From Puthiyathalaimurai


கேரள மழையால் பலா விலை வீழ்ச்சி: மலிவாக விற்கப்படும் பழங்கள்


கேரளாவில் பெய்து வரும் கன மழையால் அங்கிருந்து குமுளி வழியாக வரும் பலாப்பழங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. குமுளி பேருந்து நிலையத்தில் தற்போது ஒரு முழு பலாப்பழம் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது.
கேரளாவில் இந்த ஆண்டு பலா விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், பலாப்பழங்கள் விரைவில் அழுகி விடுகின்றன. சில பகுதிகளில் பழங்களைப் பறித்து அப்புறப்படுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் மலிவான விலைக்கு பலாப்பழங்கள் விற்கப்பட்டு வருகின்றன.





Information From Puthiyathalaimurai


கோச்சடையானைப்பார்த்து திருப்தி அடைந்த ரஜினி



பிரான்சில் நடந்த உலக திரைப்பட விழாவின்போதே கோச்சடையான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டிருந்தார் ரஜினி. ஆனால் அப்போது தயாரிக்கப்பட்டிருந்த ட்ரெய்லர் ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால், உலகத்திரைப்பட விழாவில் வெளியிடும் அளவுக்கு இது தகுதி வாய்ந்ததாக இல்லை என்று வேறு பாணியில் புதிய ட்ரெய்லரை வடிவமைக்கச்சொன்னார். அதனால் அப்போதைக்கு ட்ரெய்லர் வெளியீடு நடத்தப்படவில்லை.

ஆனால் பல மாதங்களுக்குப்பிறகு இப்போது எடிட்டிங், டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் சுறா மீனுடன் ரஜினி சண்டையிடுவது உள்ளிட்ட சில பிரமாண்டங்களும் சேர்க்கப்பட்டபிறகு படத்தை பார்த்த ரஜினிக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாம். 

மேலும், சரித்திர கதையில் உருவாகியுள்ள இந்த அனிமேசன் படத்தில் இளமையான கேரக்டரில் நடித்துள்ள ரஜினி கேரக்டர் நிறைய சாகசங்களை செய்கிறாராம். காட்டுக்குள் முகாமிட்டு ஒரு பெரும் படையை உருவாக்கும் இவர், தந்தை மற்றும் நாட்டை மீட்கும் காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்கு இணையாக மிகப்பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதனால் இப்படம் எனக்கு திருப்தி அளித்தது போல் உலக அளவில் அனைத்துதரப்பு ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும் என்று கருத்து சொல்லியிருக்கிறாராம் ரஜினி.

Information From Dhinamalar

தங்கத்துடன் திரும்பிய வில்வித்தை வீராங்கனைகள் டெல்லியில் உற்சாக வரவேற்பு




கொலம்பியாவில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் தங்கபதக்கம் வென்று வந்த இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் மெடிலின் நகரில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய அணி 201-க்கு 186 என்ற புள்ளிக்கணக்கில், சீன அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனை தீபிகா குமாரி இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இரட்டையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா குமாரி, ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு என கூறினர் .
Information From Puthiyathalaimurai


கார் உற்பத்தி வரி SEDAN கார்களுக்கு பொருந்தாது



கடந்த மத்திய பட்ஜெட்டில் கார் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரி செடன்(SEDAN) எனப்படும் சிறிய மாடல் கார்களுக்கு பொருந்தாது என மத்திய வருவாய்த்துறை விளக்கம் அளித்துள்ளது. எஸ்யுவி எனப்படும், திறனில் பெரிய கார்களுக்கு 30 சதவீத உற்பத்தி வரி பொருந்தும் என்ற நிலையில் சிறிய கார்களின் உற்பத்தி வரி 27 சதவீதமாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறிய ரக கார் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதுடன் அவற்றின் விலை சற்றே குறையலாம் என்பது கார் வாங்க விரும்பும நடுத்தர பிரிவினருக்கு ஆறுதலான செய்தியாகும்.

Information From Puthiyathalaimurai

வரத்து அதிகரிப்பால் குறைந்துள்ள சர்க்கரை விலை




பண்டிகைக் காலம் இன்னும் தொடங்காததால் சர்க்கரையின் தேவை உயராத நிலையில் ஆலைகளில் இருந்து வரத்து அதிகரித்திருப்பதால் சர்க்கரை விலை சிறிது குறைந்துள்ளது. சர்க்கரை விநியோகத்தில் மகாராஷ்டிரா முக்கிய இடம் வகிக்கிறது. அங்கு டன்னுக்கு 20 ரூபாய் வரை விலை சரிந்துள்ளதாகத் தெரிகிறது.
நேற்று முன்தினம் 35 ஆயிரம் மூட்டை சர்க்கரை சந்தைக்கு வந்த நிலையில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை 2 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையானது. இது முன்பு 2 ஆயிரத்து 940 ரூபாய் வரை விற்றது. என்றாலும், மொத்த விலையில் இச் சிறிய விலைச் சரிவால் சில்லறை விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு எனினும் சர்க்கரை விலை உயராது என்பது ஆறுதலான விஷயம்.
Information From Puthiyathalaimurai

இந்தியாவின் மிக நீளமான பாலம்:2016-க்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பு














இந்தியாவின் மிக நீளமான பாலம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை 2016-ம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
4.94 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பாலம் ரயில்கள், மற்றும் சாலைவசதிக்கும் ஏற்ற தன்மை கொண்டதாக இருக்கும்.இந்த திட்டப்பணிகள் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த பாலம் அஸ்ஸாம்(Upper assam) மற்றும் அருணாசலப் பிரதேசத்தை இணைக்க உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, தற்போது இந்த பிரம்மபுத்திரா நதியை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் ஒருசில நிமிடங்களில் இந்த நதியை கடந்து விடலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கும் இந்த பாலம் உறுதுணையாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. இந்திய வீரர்கள் தங்களது இராணுவ தளவாடங்கள் மற்றும் கடினமான பொருட்களை இந்த பாலத்தின் மூலம் எளிதாக எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்லமுடியும் என நம்பப்படுகிறது.
தற்போது இந்திய எல்லைப்பகுதிக்குள் சீனாவின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் வருவதும் போவதுமாக உள்ளனர். இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் இந்திய வீரர்கள் தங்களது படைகள் மற்றும் ஆயுதங்களுடன் விரைவில் இந்திய-சீன எல்லையை அடைய முடியும். இதன்மூலம் சீனவீரர்கள் ஊடுருவினால் விரைந்துசென்று அவர்களை விரட்டியடிக்க இந்த பாலமும் உதவும் என கருதப்படுகிறது.
இருந்தபோதிலும் தற்போது இந்த நதியினை ஒட்டியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பாலம் முழுமையாக கட்டப்பட்டால் தங்களது வாழ்வாதராம் முழுவதும் பாதிக்கப்படும் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Information From Puthiyathalaimurai


 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger