பரம்பரை பரம்பரையாக நிலத்தை உழுது விவசாயம் செய்து வந்தவர்களே சமீபகாலமாக அந்த நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் சினிமாவில் புகழ் உச்சியில் இருக்கும் சில நடிகர்களுக்கு இப்போது விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பல நடிகர்கள் சென்னைக்கு வெளியே ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிப்போட்டு பண்ணை வீடு வைத்திருக்கிறார்கள். அங்குள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வதோடு, தாங்களும் ஒரு ரிலாக்சுக்காக அடிக்கடி அங்கு சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வருகிறார்கள்.
அந்த பட்டியலில் பிரகாஷ்ராஜ், மம்மூட்டி, ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு இருக்கும் விவசாய நிலத்தை அடிக்கடி சென்று பார்வையிடுவதுடன் சிலரைப்போன்று வரப்பில் நின்று கொண்டே விவசாயம் செய்யாமல் சேற்றில் இறங்கி வேலை செய்கிறார்கள். அதோடு, டிராக்டரில் அமர்ந்து நிலத்தை உழுவது, களை எடுப்பது, உரம் போடுவது போன்ற வேலைகளையும் செய்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து அஜீத், விக்ரம், வடிவேலு ஆகியோரும் விவசாயத்தில் தீவிரமாகி வருகின்றனர். அதிலும் வடிவேலு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நிறைய நிலபுலன்களை வாங்கி குவித்துள்ளாராம். அதில் நிறைய பயிர் செய்து, அந்த பகுதி ஏழை மக்களுக்கு வேலை கொடுத்து வருகிறாராம்.
Information From Dinamalar

