ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும், சந்தானம், சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகம் முழுவதும் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.
தமிழகத்தில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. மலேசியாவிலும் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறது. அங்கு மொத்தம் 100 திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. ‘தலைவா’ படத்தின் இந்த பிரம்மாண்ட வெளியீடு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Information From Maalaimalar