ஊட்டி யில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ஊட்டி & கூடலூர் சாலையில் சாண்டிநல்லா, எச்பிஎப்., போன்ற பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
ஊட்டி தீயணைப்பு துறையினர் விடிய விடிய பணியாற்றி இந்த மரங்களை அகற்றினர். நேற்று காலை ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இம்மரம் ரயில் தண்டவாளம் மீதும் விழுந்ததால் ஊட்டி & குன்னூர் இடையே ரயில் போக்குவரத்தும் காலையில் ரத்து செய்யப்பட்டது.
Information From Dinakaran