கர்நாடகவிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90அடியை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து அங்கிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 52701 கன அடியாக நீர் வரத்து உள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 89.59 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 3.79 அடி அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழக அரசின் உத்தரவு படி, ஆடிப் பெருக்கை காவிரியில் பொதுமக்கள் கொண்டாடும் வகையில் காலை முதல் வினாடிக்கு 3000 கன அடி நீர் சுரங்கம் மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவை மற்றும் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம் ஆகியவைக்காக மொத்தம் 6800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சுரங்கம் மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
Information From Dinakaran