சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் போது, மண்ணடியில் உள்ள 150 ஆண்டுகால பழமை வாய்ந்த தேவாலயத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தேவாலயத்தை மெட்ரோ ரயில் நிர்வாகமே சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக இரண்டு வழித்தடங்களில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் வண்ணாரப்பேட்டை- மீனப்பாக்கம் விமான நிலையம் மார்க்கத்தில், மண்ணடி பகுதியில் பூமிக்கடியில் ஆழ்துழை சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் பிரகாசம் சாலையில் உள்ள மெஸ்லி தமிழ் கிறிஸ்துவ ஆலயத்தில் கடும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 1861-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மெஸ்லி ஆலயம், பழமையின் வெளிப்படாக காட்சியளிக்கிறது.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மெஸ்லி ஆலயத்தின் சீர்குலைந்த பகுதிகளை, மெட்ரோ நிர்வாகம் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Information From Puthiyathalaimurai