உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா இன்று களம் இறங்குகிறார்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்சவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து இருவரும் ‘பை’ ஆர்டர் வாய்ப்பு பெற்றதால் நேரடியாக 2–வது சுற்றில் விளையாடுகிறார்கள். 

தங்கள் சவாலை இன்று அவர்கள் தொடங்குகிறார்கள். உலக தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், 66–ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் ஒல்கா கோலோவனோவாவை சந்திக்கிறார். இதே போல் உலக பேட்மிண்டனில் முதல் முறையாக விளையாட உள்ள பி.வி.சிந்து, ஜப்பானின் கோரி இமாபெப்புவை எதிர்கொள்கிறார். 

இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், ஸ்பெயினின் பாப்லோ அபியனுடனும், மற்றொரு இந்திய வீரர் காஷ்யாப் செக்குடியரசின் பெட் கவ்கலுடனும் மோதுகிறார்கள்.

Information From Maalaimalar
Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger