New Videos from Prabhanjam.TV
Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

அமெரிக்காவில் ஹைபர்லூப் போக்குவரத்து திட்டம் தொடங்க முடிவு

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ்-இன் நிர்வாக இயக்குனரான எலோன் மஸ்க் தனது எதிர்காலத் திட்டமான ஹைபர்லூப் போக்குவரத்து திட்டத்தைப் பற்றிய அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். கன்கார்ட், அதிவேக ரயில், ஏர் ஹாக்கி டேபிள் போன்றவற்றை கலந்தாற்போன்ற மாதிரியில், சூரிய சக்தியின் உதவியுடன் உடைந்துவிடாத தன்மை கொண்ட காப்ஸ்யூல் வடிவத்தில் உள்ள இந்த போக்குவரத்து சாதனத்தில் சான் பிரான்சிஸ்கோவ

மூளையில் ரத்த உறைவை நீக்கும் நவீன ரோபோ

மூளையில் ஏற்படும் ரத்த உறைவை நீக்கும் நவீன ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்களால் தலையில் காயம் ஏற்படும்போது மூளையில் ரத்த உறைவு ஏற்படுகிறது. அதை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், புதுமையான முயற்சியாக தற்போது மூளையில் உறையும் ரத்தத்தை அகற்றும் புதிய ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மூளையின் உட்புறம் மிக ஆழமாக சென்று அங்

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற 1 லட்சம் பேர் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 'தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்' என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்ப

கின்னஸ் சாதனைக்காக 100 கிலோ எடை கொண்ட ராட்சத இட்லி தயாரிப்பு

கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (வயது 42). இவர் கின்னஸ் சாதனைக்காக 100 கிலோ எடையில் ஒரே இட்லியை தயாரிக்க முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சி கொடுங்கையூரில் நடந்தது. இதில் மிகப் பெரிய இட்லியை இனியவன் தயாரித்து காட்டினார். இதை எடை போட்ட போது 120 கிலோ 300 கிராம் எடை இருந்தது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது 10

மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்?: புதிய கருவி கண்டுபிடிப்பு

மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.   இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது, கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்க

பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இன்று காலை 9:15 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய வகையில் பிரித்வி 2 வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்த்தாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளத

வெளியானது கோச்சடையான் கதை

மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பி வரும் கோச்சடையான் கதை தற்போது வெளிவந்துள்ளது. சவுந்தர்யா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கோச்சடையான்.  தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்.  ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடாமல் அவரது அமைச்சரவையில் இருக்கும் சில

Wi-Fi தொழில்நுட்பத்துடன் இச்ணணிண அறிமுகப்படுத்தும் வீடியோ கமெரா

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட Canon  நிறுவனம் ஆனது Wi-Fi  வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. Vixia எனும் பெயருடன் அறிமுகமாகும் இச்சாதனமானது 3 து 0.9 து 3.8 அங்குல அளவு பரிமாணத்தை உடையதாகக் காணப்படுகின்றது. மேலும் 12.8 மெகாபிக்சல்களை கொண்ட இக்கமெராவில் 2.8 அங்குல அளவுடைய LCD திரையும் பொருத்தப்ப

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது. இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்பு குத்தப்பட்டுவருகின்றன. அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மணிநேரம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்

சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னணி விரர் பருபள்ளி காஷ்யப் ஆகியோர் காலிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் வளர்ந்து வரும் வீராங்கனை பி.வி.சிந்து மட்டும் பதக்கம் வெல்லும் போட்டியில் இருந்தார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், உலகத் தரநிலையில் 8-ம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஷிஜ

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றி

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கும் நீர்மூழகிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்றிரவு இந்த சோதனை நடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இது இந்திய அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை நிலம், ஆகாயம் மற்றும

பாரீஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் ஈபிள் கோபுரம் (டவர்) உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இது 1889–ம் ஆண்டு ஈபிள் என்ற என்ஜினீயரால் வடிவமைத்து கட்டப்பட்டது. 1062 அடி (324 மீட்டர்) உயரம் கொண்டது. கோடைகாலமான தற்போது அதை தினசரி 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். ஆண்டுக்கு 70 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று இந்த கோபுரத்தை தகர்க்க அதற்கு வெடிகுண்டு

போலி கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் ரூ.4.4 லட்சம் நூதன கொள்ளை

மும்பை கொலாபா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி போலீஸ்காரர்களின் சம்பள பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் உஷார் ஆனார்கள். சம்பந்தப்பட்டவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்தனர். தற்போது மீண்டும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை நடந்துள்ளது. இந்த முறை போரிவல்லி பகுதி

ரெடியானது கோச்சடையான் டிரைலர் (வீடியோ இணைப்பு)

செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டிரெய்லர் ரெடியாகி யுள்ளது. கோச்சடையான் எப்போது ரிலீஸாகும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரெய்லர் கூட தயாராகிவிட்டதாம். அவதார் படம் போலவே இந்தப் படத்திலும் விஷுவல் எபக்ட் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் தேவைப்

மயிலம் அருகே மர்மமாக தீபிடிக்கும் குழந்தை: டாக்டர்கள் காரணத்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சி

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த டி.பரங்கினி பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராகுல் என்ற 2 மாத குழந்தை உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ராகுல் வீட்டில் இருந்தபோது அவனது உடலில் திடீரென தீப்பிடித்தது. வீடும் தீப்பற்றி கொண்டது. அவனை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன்பிறகு பக்கத்து வீட்டில் மர்மமாக தீப்பிடித்தது. இதனால் பயந்துபோன

தியேட்டர் அதிபர்கள் அவசர கூட்டம்: விஜய்யின் தலைவா படம் நாளை ரிலீசாகுமா?

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள தலைவா படம் நாளை (9–ந்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மதராச பட்டணம் விஜய் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார்.நேற்று காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தலைவா படத்தை திரையிடும்

இந்தியா ஏ அணியில் ஓடிசா வீரர்: 44 போட்டிகளில் 170 விக்கெட்களை வீழ்த்தியவர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் பசந்த் மொகந்திக்கு இந்திய ஏ அணியில் இடம் கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விசாகப்பட்டினத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி விளையாட உள்ளது. இதில் இந்திய ஏ அணியில் இடபெற்றிருக்கும் பசந்த் மொகந்தி இதுவரை 44 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டுகளில் சர்வ

சவூதி, மலேசியா, எகிப்தில் இன்று ரமலான் கொண்டாட்டம்

சவூதி அரேபியா,மலேசியா, இந்தோனேசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதேபோல், கேரளாவிலும் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். 30 நாட்கள் நோன்பிருந்து இஸ்லாமியர்கள் ரமலான

என் மகள் மீது வைத்துள்ள பாசத்தால் அழுகிறேன்: டைரக்டர் சேரன்

மகள் பிடிவாதத்தால் டைரக்டர் சேரன் உடைந்து போய் இருக்கிறார். ஐகோர்ட்டில் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார். தாமினி முகத்தை பார்க்கவும் பேசவும் சேரனிடம் ஆர்வம் பொங்கியது. ஆனால் தாமினி கண்டு கொள்ளவே இல்லை. முகத்தில் வருத்தம், சலனம் எதுவும் இன்றி இருந்தார். காதலன் சந்துருவை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக

ஒரே நாளில் ரிலீஸ்: விஷால், கார்த்தி படங்கள் போட்டி

விஷாலின் ‘மதகஜராஜா’ படமும் கார்த்தியின் ‘பிரியாணி’ படமும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6–ந்தேதி ஒரே நாளில் ரிலீசாகின்றன. இவ்விரு படங்களும் போட்டியிடும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் வருகிறது. மதகஜராஜா படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படம் முன்பே ரிலீசாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger