வானியல் அளவீடு மற்றும் இயற்கை பேரழிவுவை படம் எடுக்க முடியும்
100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்த கேமரா இயங்கும். மிகவும் நவீனமான ஒளிப்பதிவும், உயர்திறன் தகவல் சேமிப்பு திறனும் உள்ள இந்த கேமராவிற்கு IOE3 கான்பான் என்று பெயரிடப்பட்டது. வானியல் தொலைவு இயக்க ஆய்வில் இந்த கேமரா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Information From Thinakaran

