மும்பாய்: மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்று செவ்வாய் 2020 ரோவர் விண்கலம் சிவப்பு கிரகத்தின் ஆய்வில் மேற்கொள்ளவிருக்கிறது, தவிர கடந்த கால வாழ்க்கையின் அறிகுறிகளை தேடிகொண்டிருக்கிறது என்று நாஸா கூறுகிறது. செவ்வாயில் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டிருக்கும் க்யூரியாசிட்டி விண்கலத்தை பயன்படுத்தி விண்கலத்தில் எண்ணற்ற தொழில்நுட்பங்களை இணைத்து ஜூலை அல்லது ஆகஸ்ட் 2020-ம் ஆண்டில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 1, 2013 தேதியில் வெளியிட்ட 154 பக்க அறிக்கையில் எதிர்காலத்தில் வாழ்வதற்கான அறிகுறிகளை எடுத்து வருவதில் முக்கிய பங்கு வகிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாயின் மண் மற்றும் பாறைகளை போன்ற சாத்தியமான ஆதாரங்களை தேடி சேகரித்து பூமியில் பகுப்பாய்வுகளுக்காக கொண்டு வரப்படும்.
விண்கலத்தின் முதன்மை நோக்கங்கள்: செவ்வாய் கிரகத்தில் ஆஸ்ட்ரோஉயிரியல் ரீதியாக பொருத்தமான பழமையான சுற்றுச்சூழல் அதன் புவியியல் செயல்முறைகள் மற்றும் வரலாறு முறையை கண்டுபிடித்து ஆராய்தல். தேர்ந்தெடுக்கப்பட்ட புவியியல் சுற்றுச்சூழல் மற்றும் சாத்தியமுள்ள உயிர் கையொப்பங்கள் திறனை மதிப்பீடு செய்தல். எனினும் இந்த விண்வெளி ஆராய்ச்சி எட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருகின்றனர்.
Information From Thinakaran

