
விலைக்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் ஆப்ஸ்கள் இனி இலவசமாக கிடைக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆப்ஸ்கள் ஸ்மார்ட்ஃபோன்களின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக மாறி உள்ளன. இவற்றில் சில ஆப்ஸ்கள் விற்பனைக்கும், பல இலவசமாகவும் கிடைக்கின்றன.
இந்த ஆப்ஸ்கள் குறித்து, ஃப்லரி என்ற மொபைல் பகுப்பாய்வு நிறுவனமானது, ஓர் ஆய்வு நடத்தியது.
அதன் படி, ஒரு சராசரி ஆப்-பின் விலை கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், விளம்பரங்களுடன் கிடைக்கும் ஆப்-களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறதாம்.
குறிப்பிட்ட தொகையை வசூலிப்பதற்கு பதிலாக, கடந்த 4 ஆண்டுகளில் ஆப் உருவாக்குபவர்கள், ஆப்-களின் விலையை தளர்த்தி, தளர்த்தி கடைசியில், விளம்பரங்களை ஒருங்கிணைத்தோ அல்லது இலவசமாகவோ வழங்க தொடங்கியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதனால், 10 சதவீத ஆப்-கள் கூட இலவசமாக கிடைப்பதே இல்லையாம்.

குறிப்பாக, ஐபேட்-க்கு வழங்கப்படும் ஆப்-களே மிக உயர்ந்த விலையுடதாக உள்ளன. அவைகளின் சராசரி விலை 0.50 அமெரிக்க டாலராகும்.
ஐஃபோன்கள் மற்றும் ஐபோட் டச் ஆப்-களின் சராசரி விலை 0.19 டாலராகும்.
இருப்பதிலேயே ஆண்ட்ராய்டு ஆப்-களே மிக மலிவானது. அவைகளின் சராசரி விலை 0.06 டாலராகும்.
மக்களின் ஏற்கும் தன்மையை கண்காணிக்க, சில ஆப் நிரலாளர்கள் ஆராய்ச்சி முறையில் பல்வேறு விலையில் ஆப்களை விற்றனர். அதில், 84 சதவீத ஆப்-களானது, மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப இலவச ஆப்-களாகவே மாறிவிட்டது.
இனி வரும் காலங்களிலும், ஆப்ஸ்-களின் சராசரி விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே தான் இருக்கும் என இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. ஆப்ஸ் நிரலாளர்கள் , விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டிக்கொள்கின்றனர் என்றும் ஆய்வு சொல்கிறது.
Information From Puthiyathalaimurai
