புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். நிஜம்தாங்க நம்புங்க ப்ளீஸ்... எஸ்.பி.ஆர் பிக்சர்ஸ் என்ற கம்பெனி தயாரிக்கும் நிலவில் மழை என்ற படத்தில்தான் புன்னகை அரசி ஹீரோயின். படத்தை இயக்கும் எஸ்பிஆர் கூறியதாவது: மக்களுக்காகவே வாழும் ஒரு டாக்டரின் கதை. அதற்கு பொருத்தமானவர் கே.ஆர்.விஜயாவைத் தவிர வேறு யாரும் இல்லை. முதலில் அவரிடம் நடிக்க கேட்டபோது என்னால முடியாதுன்னு மறுத்திட்டார். அப்புறம் படத்தோட கதையை சொல்லி கதையின் நாயகியே நீங்கதான்னு சொன்ன பிறகு ஒத்துக்கிட்டு நடிச்சாங்க. நேர்மையான டாக்டர் உயிருக்கு போராடும் ஒரு வாலிபனுக்கு சிகிச்சை அளிக்கிறார். அவன் போலீஸ் தேடும் தீவிரவாதி. போலீஸ் அவனை என்கவுண்டரில் கொல்ல தேடுகிறது. ஒரு டாக்டராக அவன் உயிரை காப்பாற்றித்தருவேன் என்கிறார் கே.ஆர்.விஜயா. இதனால் வரும் சிக்கல்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தோட ஸ்டோரி. உணர்ச்சிபூர்வமான படமா இருக்கும், எஸ்.பி.குமார் மியூசிக் போடுறார். ரவிஷங்கர் கேமராமேன் எல்லாருமே புதுமுங்கள் என்கிறார் இயக்குனர்.
Information From Dinamalar