உத்தரகண்டில் பெய்த கனமழையினால் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் தியோசரி கிராமத்தில் 14 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பாவுரி மாவட்டம் கடாலி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.
சமவுளி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இருப்பினும் மக்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Information From Puthiyathalaimurai