காத்மண்டு: தெற்காசிய கால்பந்து தொடரின் (16 வயதுக்குட்பட்டோர்) பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில், 16 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தன. பின், கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் பெதேஷ்வர் சிங், புரோசென்ஜித், சூர்யா, ஆரோன் ஆகியோர் கோல் அடித்தனர்.
சநாளை நடக்கவுள்ள பைனலில், இந்திய அணி, நேபாளத்தை சந்திக்கிறது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Information From Dinamalar