பாலிவுட்டின் சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த கருத்து கணிப்பில் அவர் சிறந்த நடிகராகவும், முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் பிரபல வாராந்திர பத்திரிகை ஒன்று சிறந்த பாலிவுட் பிரபலங்கள் யார் என்ற பெயரில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் அநேக நபர்கள் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைத்தான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துள்ளனர். 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் அமிதாப் தான் பாலிவுட்டின் சிறந்த நடிகர் என்று தேர்வாகி முதல் இடத்தை பிடித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமிதாப்புக்கு அடுத்தபடியாக பழம்பெரும் நடிகர் திலீம் குமார் இரண்டாவது இடமும், ஷாரூக்கான் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள்தவிர ராஜ்கபூர் 5ம் இடமும், நர்கீஸ் 6வது இடமும், தேவ் ஆனந்த் 7வது இடமும், வகீதா ரஹ்மான் 8வது இடமும், ராஜேஷ் கண்ணா 9வது இடமும், நடிகை ஸ்ரீதேவி 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சல்மான் 11வது இடமும், அமீர் கான் 14வது இடமும், தர்மேந்திரா 15வது இடமும், ஹேமாமாலினி 18வது இடமும், மதுபாலா 24வது இடமும், கஜோல் 30வது இடமும், ஹிருத்திக் ரோஷன் 32வது இடமும், ராணி முகர்ஜி 38வது இடமும், கரீனா கபூர் 43வது இடமும், மும்தாஜ் 50வது இடமும், சைப் அலிகான் 59வது இடமும், பிரியங்கா சோப்ரா 86 இடமும், கத்ரீனா கைப் 93வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
Information From Dinamalar