வருமான வரி செலுத்துவதற்கு ஜூலை 31–ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வருமான வரி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆன்–லைன் மூலம் வருமான வரி கணக்கை செலுத்த வசதி செய்யப்பட்டிருந்ததால் பெரும்பாலானோர் அதை பயன்படுத்திக் கொண்டனர்.
ஜூலை மாதம் 29–ந் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை கணக்கு அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டன. வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவும் ஆகஸ்டு 5–ந்தேதி வரை நீடிக்கப்பட்டது.
இன்று வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாள். இன்று காலை 9.30 மணி முதல் அலுவலகத்தில் வருமான வரி கணக்குகள் பெறப்பட்டன. மாலை 5.30 மணியுடன் வருமான வரிகணக்குகள் தாக்கல் செய்வது முடிவடைகிறது.
இதுவரை சென்னையில் 50 அயிரத்து 450 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். இன்று காலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
நேரம் ஆக ஆக கணக்கு தாக்கல் செய்ய வந்தவர் களின் எண்ணிக்கை அதிகமானது. எனவே இன்று மாலைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Information From Maalaimalar

