கர்நாடகா அணைகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகமாகியுள்ளதால், ஒகேனக்கல் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாழ்வான, மற்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து தண்ணீரின் அளவு அதிகமாகி வருகிறது.
அதனால், அடிபெருக்கு தினத்தை கொண்டாட யாரும் ஒகேனக்கல் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 14ஆவது நாளாக இன்று ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.
Information From Puthiyathalaimurai