அஜீத் சினிமாவுக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேஸ் புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது. அஜீத் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.
கதாநாயகனாக அறிமுகமான முதல் தமிழ் படம் அமராவதி. 1993–ல் இப்படம் வந்தது. வெறும் 32 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இது எடுக்கப்பட்டது. ஆசை, காதல் கோட்டை படங்கள் பிரபலபடுத்தியது. அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிட்டிசன், வில்லன், வரலாறு, என பல ஹிட் படங்களில் நடித்தார்.
பில்லா, மங்காத்தா படங்கள் வசூல் சாதனை படைத்தன. தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 53–வது படம் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
Information From Maalaimalar