கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2ஆம் அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து, யூரேனியம் நிரப்பும் பணி விரைவில் தொடங்கப்படும் என அணு உலை வளாக இயக்குனர் சுந்தர் தகவலித்துள்ளார். மேலும், விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிய மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி நேற்றிரவுடன் நிறைவடைந்தது. விரைவில் முதற்கட்ட மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அணு மின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்திக்கான பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முதல் உலையில் யூரேனியம் நிரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து, மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்து இந்த மாதம் 14ஆம் தேதியிலிருந்து மின் உற்பத்தி நடந்து வருகிறது.
Information From Puthiyathalaimurai