கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், ஓகேனக்கல் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, ஓகேனக்கலுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இதனால் ஓகேனக்கலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். அத்துடன் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Information From Puthiyathalaimurai