இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் 3 ஆண்டுகள் நீடிப்பதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி ஐ.ஐ.டி மற்றும் அகமதாபாத் ஐ.ஐ.எம்.-ல் தங்கப்பதக்கம் பெற்ற ரகுராம் ராஜன், கடந்த ஆண்டு நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார வல்லுநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Information From Maalaimalar