USB என்பதன் விரிவாக்கம் Universal Serial Bus என்பதன் சுருக்கமே ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ்.
இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.
அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity
இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும்Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.
பிளாப்பி(Floppy) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb. இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவை. அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொண்டு உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் செயலைச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செய்து கொள்வது நல்லது.
USB -இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
http://www.usbalert.nl/usbalert/download.php
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version-ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar-ல் USBalert செய்திப்படம் காட்டும்.
இம்மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.
ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
Information From Dhinakaran