கார்களின் உபயோகம் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையானதாகிவிட்டது. கூடுதலாக, உயர் ரக கார்கள் வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில், அனைவரையும் கவரும் போர்ஷ் கார் தொடர்ந்து 9-ஆம் ஆண்டாக “மிகவும் கவர்ச்சிகரமான, மனதை ஈர்க்கும் கார்” என்ற பெருமையை பெற்றுள்ளது.
தி ஆட்டோமோட்டிவ் பெர்ஃபார்மன்ஸ், எக்சிக்யூஷன் அண்ட் லேஅவுட் (APEAL) என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
ஒரு காரை சொந்தமாக்கிக் கொள்வதும், அதை வாங்கிய முதல் 90 நாட்களில் உணரப்படும் அனுபவத்தையும் மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஜே.டி. பவர் ஆய்வு நிறுவனத்தின் (JD Power study) வருடாந்திர உரிமையாளர் மனநிறைவு (ownership gratification) அறிக்கையின் படி, 884 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது போர்ஷ் கார்.
அதிலும், போர்ஷ்-ஷின் கயென் (Porsche Cayenne) என்ற விளையாட்டு பயன்பாடு வாகனம் (mid-size premium SUV segment) மிகவும் விரும்பப்படும் காராக உள்ளது.
அதற்கு அடுத்த இடங்களில், ஆடி (Audi), பி.எம்.டபுள்யூ (BMW), லேண்ட் ரோவர் (Land Rover) மற்றும் டோயோடவின் (Toyota) லெக்சஸ் (Lexus) உள்ளது.
Information From Puthiyathalaimurai