சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்களுக்காக தனி வெப்சைட் தொடங்க இயக்குனர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பிரபலம் என்ற பெயரில் தொடங்கப்பட உள்ள அந்த இணையதளத்தில், சினிமாவில் நடிக்க ஆசைப்படும், ஆண் மற்றும் பெண்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. அவ்வாறு பதிவு செய்துகொள்பவர்களின் விவரங்களை இயக்குனர்கள் பார்த்து, தங்களுக்கு தேவையான நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இதன் மூலம் இடைத்தரகர்களுக்கு அவசியமில்லாமல் போய்விடும், என்று இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் கூறியுள்ளார்.
Information From Dhinamalar