விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வெளியாவது உறுதியாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவுக்கு படம் அனுப்பப்பட்டு விட்டதால், அடுத்தகட்டமாக எந்தெந்த முக்கிய ஊர்களில் படம் வெளியாகிறதோ அங்கெல்லாம் பிரமாண்ட பப்ளிசிட்டிகளை முடுக்கி விட இப்போதே தலைவா டீம் வீறுகொண்டு நிற்கிறது.
இதற்கிடையே விஜய்யின் ரசிகர் பட்டாளமும் தங்கள் சார்பில் ராட்சத கட்அவுட்களை ரெடி பண்ணும் வேலைகளில் இறங்கி விட்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய தியேட்டர்களில் அடுத்த மாதம் 9-ந்தேதி தலைவா வெளியாகிறது. ஆந்திராவிலும் முக்கிய தியேட்டர்களாக தேடிவந்தனர்.
ஆனால், முக்கியமான எந்த தியேட்டரும் கிடைக்கவில்லையாம். ஏன் என்ன காரணம்? எனறு விசாரித்தபோது, ஆகஸ்ட் 7-ந்தேதி தெலுங்கு நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அத்தாரிண்டிகி தாரீதி என்ற படம் வெளியாகிறதாம். அதனால் மொத்த தியேட்டர்களையும் குத்தகை எடுத்து விட்டார்களாம்.
அவர் அங்குள்ள முன்னணி நடிகர். அதனால் அவர் படம் திரைக்கு வருகிற அதே நாளில் தலைவாவை வெளியிட்டாலும் சிக்கல்தான் என்பதால், அப்படம் ஓடி ஓரிரு வாரங்களுக்குப்பிறகு நல்ல தியேட்டர்கள் கிடைக்கிறபோது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று ஆந்திராவில் தலைவா ரிலீஸ் தேதியை தள்ளி போட்டுள்ளனர்.
Information From Dinamalar