நிலவின் தென் துருவத்திற்கு செல்லும் முதல் திட்டம் அறிவிப்பு


நிலவின் தென் துருவத்திற்கு செல்லும், உலகின் முதல் திட்டத்தை இன்டர்நேஷனல் லூனார் அப்சர்வேட்டரி அசோசியேஷன் (International Lunar Observatory Association) மற்றும் மூன் எக்ஸ்பிரஸ் இன்க் (Moon Express, Inc,) என்ற இரு அமைப்புகள் ஒன்றிணைந்து அண்மையில் வெளியிட்டுள்ளது.
தென் துருவத்தில் அமைக்கப்படும் இந்த அப்சர்வேட்டரி மூலம் எடுக்கும் புகைப்படங்களை, இணையம் வழியாக, நேரடியாக ஆராய்ச்சியாளர்களும், கல்வியாளர்களும், பொது மக்களும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்திட்டம் குறித்து மூன் எக்ஸ்பிரஸ் இன்க் (Moon Express, Inc,)-கின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் ராபர்ட் ரிசர்ட்ஸ் (Dr. Robert Richards) கூறுகையில் : “எங்களது இரண்டாவது திட்டமானது, இண்டர்நேஷனல் லூனார் அப்சர்வேட்டரியை (ஐ.எல்.ஓ) (International Lunar Observatory (ILO)) நிலவின் தென் துருவத்திற்கு கொண்டு சேர்த்து, அங்குள்ள வளங்களை ஆராய்வதாகும் என்றார்.
வரலாற்று முக்கயத்துவமிக்க முயற்சியை மேற்கொண்டு, சூரிய மண்டலத்தில் இதுவரை ஆராயப்படாத பகுதிகளில், தனது ஆராய்ச்சிகளை செய்ய உள்ளது.
இந்த ஐ.எல்.ஓ ஆனது, முழு வெற்றி அடையும் பட்சத்தில், நிலவிலிருந்து இயங்கும் முதல் தனியார் விண்வெளி தொலைநோக்கி இதுவாக தான் இருக்கும்.
ஐ.எல்.ஓ திட்டமானது, வானியற்பியல் தொடர்பான கண்காணிப்புகளை இடையறாது மேற்கொள்ளவும், வணிகரீதியான சந்திர தொடர்பு அமைப்புக்கும் ஒரு நிரந்தர தளமாகவும் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது”
Information From Puthiyathalaimurai

Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger