நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. 100 அடியை கடந்தபோது நள்ளிரவில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீரில் மலர்த்தூவி வரவேற்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து அதிகளவு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் அணையில் 66 டி.எம்.சி,. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 6800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், காட்டாறு போல் பொங்கி வரும் தண்ணீரைக் காண சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் மேட்டூருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
Information From Puthiyathalaimurai