தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சோள மணிகள் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உருளைக்கிழங்கு - 1
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
• உருளைக்கிழங்கு, சோள மணிகளை வேக வைத்து மசித்தது கொள்ளவும். • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
• பின்பு வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், சீரகத் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
• ஊற வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக்கிக் அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே கார்ன் கலவையை சிறிது வைத்து மூடி, மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கார்ன் சப்பாத்தி ரெடி!!!
Information From Maalaimalar