தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.–இண்டர்நெட் சேவை: விரைவில் அறிமுகம்



வங்கிகளை போன்று தபால் நிலையங்களில் ஏ.டி.எம், இண்டர்நெட் சேவை விரைவில் தொடங்கும் திட்டம் உள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், தியாகராய நகர், மைலாப்பூர் மற்றும் தாம்பரம் அலுவலகங்களில் இந்த வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

வங்கிகளில் உள்ள இண்டர்நெட் சேவை போல எந்த வங்கி கிளைக்கும் தங்களது கணக்கில் இருந்து பணம் அனுப்பும் வசதி, வெளி இடங்களில் உள்ளவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் அனுப்புவது போல் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற ஏதுவாக இத்திட்டம் செப்டம்பர் மாதம் செயல்படுத்த திட்டமிடப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில தபால் அலுவலகங்களில் மட்டுமே இந்த விதியை முதலில் வழங்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள 4 தலைமை தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் அத்திட்டத்தின் மூலம் வங்கிகளில் பெறக்கூடிய எல்லா சேவைகளையும் தபால் அலுவலக வாடிக்கையாளர்கள் பெறலாம். தபால் நிலையங்களில் பணம் எடுக்கவும், பென்சன் பணத்தை பெறவும் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்ற நிலை உள்ளது.
இண்டர்நெட் வசதி செயல்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் எந்த தபால் அலுவலகத்திற்கும் சென்று எளிதாக பணப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபடலாம்.
இத்திட்டம் நீண்ட முறைப்படுத்தும் வேளையில் ஏ.டி.எம். வசதியும் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 4 தலைமை தபால் நிலையங்களிலும் அக்டோபர் மாதம் ஏ.டி.எம். மையம் நிறுவப்படுகிறது. அதில் உள்ள 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கலாம்.

இது குறித்து தபால் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 110 தபால் அலுவலகங்களில் இண்டர்நெட் சேவையை அறிமுகம் செய்வதற்கான சாப்ட்வேர் அமைக்கப்படுகிறது. அதற்கான சோதனையும் தற்போது நடந்து வருவதாக தெரிவித்தார்
.
இந்த திட்டம் அனைத்து தபால் நிலையங்களுக்கும் அடுத்த 2 வருடங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னை தபால் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸ்சாண்டர் கூறுகையில், சென்னை மண்டலத்தில் 3 கோடியே லட்சம் பேர் தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அனைத்து தபால்துறை ஊழியர்களுக்கும் இண்டர்நெட் சேவை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் இண்டர்நெட் சேவை, மொபைல் சேவை, மொபைல் பண பரிமாற்றம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

Information From Maalaimalar


Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger