இரண்டாண்டு வனவாசத்துக்குப்பிறகு தெனாலிராமன் என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, அப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல், கடந்த சில ஆண்டுகளாகவே எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்த கவுண்டமணியும் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன் தான் தயாரிக்கும் இப்படத்தை அவரது உதவியாளர் ஒருவர் இயக்குகிறாராம். இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், இப்படத்தில் கவுண்டரை ஹீரோவாகவே நடிக்க வைக்கிறார். தனக்கு இப்படம் பெரிய ரீ-என்ட்ரியாக இருக்கும் என்று கருதும் கவுண்டமணி, தற்போது கடலை போட்டுக்கொண்டிருக்கும் சில காமெடியன்களுக்கு ஜர்க் கொடுக்கும் வகையில் அதிரடியாக களமிறங்கப்போகிறாராம்.
அதோடு, இப்படத்தில் அவருக்கு ஒரு யூத்தான ஜோடியும் உண்டாம். ஆக, காதல், காமெடி, செண்டிமென்ட், ஆட்டம் பாட்டம் என கலந்துகட்டி அடிக்கப்போகிறாராம் கவுண்டர்.
Information From Dinamalar