நாகர்கோவிலில் காய்கறிகள் விலை கடந்த மாதம் கிடு கிடுவென்று உயர்ந்து காணப்பட்டது. தற்போது ஆடி மாதம் பிறந்ததையொட்டி காய்கறிகள் விலை கடந்த வாரம் முதல் குறைந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. அதே சமயம் தக்காளி விலையில் மட்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.14 ஆக கிடு கிடு வென்று சரிவடைந்தது.
குமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
காய்கறிகள் விலை விபரம் வருமாறு பழைய விலை அடைப்புக் குறிக்குள்:–
கத்தரிக்காய் (நாடு)– 50 (40)
கத்தரிக்காய் (சாதா)– 45 (30)
வெண்டைக்காய் – 40 (30)
மிளகாய் (நாடு) – 55 (50)
பஜ்ஜி மிளகாய் – 50 (30)
பாகற்காய் – 32 (30)
பால்சேம்பு – 60 (50)
பல்லாரி – 38 (34)
கேரட் – 58 (44)
காலிபிளவர் – 40 (35)
இஞ்சி – 210 (210)
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.44–க்கும், முட்டை கோஸ் ரூ.25–க்கும், உருளைக் கிழங்கு ரூ.24–க்கும் விற்பனை யாகிறது.
ஆவணி மாதம் பிறந்த பிறகு சுபகாரியங்கள் திரும ணங்கள் அதிகளவில் நடக்கும் என்பதால் காய்கறி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
Information From Maalaimalar