அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்கும் நிகழ்ச்சியில் மக்களை கலந்துக்கொள்ள கூறி அக்கிரத்தை நோக்கி மக்களை கை அசைக்க அறிவித்திருந்தது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சனி கிரகதிற்கு அனுப்பியுள்ள கஸ்சினி விண்கலம் அக்கிரகத்தின் சுற்று வட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலை நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கஸ்சினி விண்கலம் பூமியை புகைப்படம் எடுக்கும், அப்போது வட அமெரிக்காவில் பகல் பொழுதாக இருக்கும். புதன் கிரகத்தில் உள்ள மெஸ்செஞ்சர் விண்கலம் இன்று புகைப்படம் எடுக்கும் போது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் பகல் நேரமாக இருக்கும்.