50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிரிட்டனில் வெயில் வாட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பம் 102 டிகிரி அளவுக்கு இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர். இதுவரை வெயிலுக்கு பரிதாபமாக 650 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனின் பல பகுதிகளில் கடும் கோடை வெயில் கொளுத்துவதால், 650 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டனில், 50 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பம் தாளாமல், மக்கள் பலர், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
வாட்டர் லூ, கென்ட், ஹாம்டன் உள்ளிட்ட பல பகுதிகளில், 102 டிகிரி அளவுக்கு, வெப்பம் தகிக்கிறது. கடந்த, ஒன்பது நாட்களில், 650க்கும் அதிகமானவர்கள் வெயிலுக்கு பலியாகியுள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் உயிரிழந்துள்ளனர்.