மகேந்திரகிரி விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி கடந்த 5ஆண்டுகளாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவரது முயற்சி வெற்றி பெற்றதையடுத்து நேற்று ஹைட்ரஜன் பேருந்தின் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. டாடா மோட்டார்ஸ் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக ஹைட்ரஜன் பேருந்து இயக்கிக் காட்டப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் ஹைட்ரஜன் வாயு மூலம் பேருந்து இயங்கியது கண்டு அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவில் ஹைட்ரஜன் மூலம் பேருந்து இயக்கி காட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக நெல்லையில் இருந்து ஆந்திரா வரை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த பேருந்தை ஓட்டிப் பார்க்கும் முயற்சியும் நடைபெறவுள்ளது.
Information From Puthiyathalaimurai