டைரக்டர் விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் – நடிகை அமலாபால் ஜோடி நடித்துள்ள படம் தலைவா. மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள இப்படத்திற்கு சென்சார்போர்டு யு சான்று அளித்துள்ளனர். இதுபற்றி தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில், தலைவா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 90 நாட்களும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 30 நாட்களும், சென்னையில் 5 நாட்களும் நடந்தன. படத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. சண்டை காட்சிகள் மட்டும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிவடைந்து, படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்துக்கு தணிக்கை குழுவினர், யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படமும் நன்றாக வந்துள்ளது என்றார். தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
Information From Dhinamalar

