சொகுசு கார்களின் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆடி, தனது புதிய ரக சொகுசு காரான ‘ஆர்.எஸ். 5 கூபே’-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த கார்களின் இன்ஜின் எரிபொருள் வெளிப்படும் ஊசிமுனை கொண்டது. இதனால் ரேஸில் பாயும் கார்களை விட வேகமாக சீறி பாயும் தன்மை கொண்டது. அகலமான இருக்கை வசதி, அதிநவீன வசதி கொண்ட எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ.95.28 லட்சமாகும். நடப்பாண்டில் 6மாத காலத்தில் ஆடி 4846 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21 சதவீதம் வளர்ச்சியாகும். தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் 26 விநியோகஸ்தர்களை கொண்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இதை 34-ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. dinamalar.com
ஆடியின் புதிய சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

Labels:
News