இந்திய சாலைகளில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய அம்பாசடர் கார்களுக்கு புதிய பெருமையும், அங்கிகாரமும் இப்போது கிடைத்துள்ளது. உலகிலேயே சிறந்த டேக்சி, அதாவது பொதுப் பயன்பாட்டு காராக அம்பாசடர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டாப் கியர் எனப்படும், பிரபல இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி அம்பாசிடருக்கு இந்த பெருமையை தந்துள்ளது. உலக அளவில் பல்வேறு கார்களை அலசி ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக டாப் கியரின் செயல் இயக்குனர் ரிச்சர்ட் ஹேம்மண்ட் தெரிவித்துள்ளார்.
சிகே பிர்லா நிறுவனம் 1948-ம் ஆண்டிலிருந்து அம்பாசிடர் ரக கார்களை தயாரித்து வருகிறது. 1980-கள் வரை இந்த கார்களே, இந்தியசந்தையில் முன்னணியில் இருந்தன. மாருதி உள்ளிட்ட பிற நிறுவனங்களின் கார்கள் வருகைக்கு பிறகு, அம்பாசடர் கார்கள் தங்கள் சந்தைப் பங்கை இழந்து வருகின்றன.
Information From Puthiyathalaimurai
Information From Puthiyathalaimurai