இந்தியன் பாட்மிண்டன் லீக் ஏலம் தொடங்கியது: சாய்னா ரூ.72 லட்சத்திற்கு ஏலம்




இந்திய பாட்மிண்டன் லீக் போட்டிகளையொட்டி இன்று வீரர் , வீராங்கனைகளுக்கான ஏலம் சற்றுமுன் தொடங்கியுள்ளது.டெல்லியில் நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் ஹைதரபாத் அணிக்கு சாய்னா நேவால் தேர்வாகியுள்ளார். அவர் 72 லடசம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் பிரிவில் பெங்களூர் அணிக்கு கஷ்யப் 44 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதே போன்று மும்பை மாஸ்டர்ஸ் அணிக்கு மலேசிய வீரர் லீ சாங் ஒய் அதிக பட்சமாக 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடைபெறும் இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 14ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணியில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெறுகின்றனர். 150 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
Information From Puthiyathalaimurai


Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger